கோயில்களுக்கான செயல் அலுவர்கள் நியமன விவகாரம் : அறநிலையத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

சென்னை உயர்நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறைக்கு செயல் அலுவலர்கள் நியமன உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் நியமித்து பிறப்பித்த உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஆயிரத்து 809 கோயில்களை 668 செயல் அலுவலர்கள் நிர்வகித்து வருவதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அளித்த பதிலில், 3250 செயல் அலுவலர்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர்களின் நியமன உத்தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்த போது, கடந்த 2022 ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மனுதாரர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.



Source link


Spread the love
  • Related Posts

    Sollathigaram | ” நீதிபதி தெளிவா Order போட்டிருக்காரு” – G.K.Nagaraj | Thiruparankundram | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Sollathigaram | ” நீதிபதி தெளிவா Order போட்டிருக்காரு” – G.K.Nagaraj | Thiruparankundram Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App – https://onelink.to/desc-youtube SUBSCRIBE – http://bit.ly/News18TamilNaduVideos????News18 Tamil Nadu 24/7…


    Spread the love

    Silent Killer | உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் மற்றும் கண்டறியும் முக்கிய தகவல்கள் | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      “உயர் இரத்த அழுத்தத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளாக தலைவலி, மங்கலான பார்வை, மூச்சுத் திணறல், மார்பு வலி, மூக்கில் இரத்தப்போக்கு (எபிஸ்டாக்ஸிஸ்) மற்றும் நுரையுடன் கூடிய சிறுநீர் போன்றவை இருக்கும். இதில் முதல் அறிகுறி தலைவலிதான். இவையன்றி…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *