கோடை சீசனில் ஊட்டிக்கு 6 லட்சம் பேர் வருகை: இ-பாஸ் நடைமுறையால் கடந்தாண்டைவிட வருகை குறைந்தது | 6 lakh people visit Ooty during the summer season

Spread the love


ஊட்டி: நீலகிரி ​மாவட்​டத்​தில் கடந்த ஒரு மாத​மாக நடந்து வந்த கோடை விழா நிறைவடைந்​தது. கடந்த இரு மாதங்​களில் ஊட்​டிக்கு 6 லட்​சம் சுற்​றுலா பயணி​கள் வந்​துள்​ளனர். கடந்​தாண்டை விட ஒரு லட்​சம் பேர் வருகை குறைந்​த​தால் சுற்​றுலா ஆர்​வலர்​கள் கவலை அடைந்​துள்​ளனர்.

நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள சுற்​றுலா தலங்​களுக்கு தின​மும் வெளி​மாவட்​டங்​கள் மட்​டுமின்​றி, வெளி​மாநிலங்​களில் இருந்​தும் பல்​லா​யிரக்​கணக்​கான சுற்​றுலா பயணி​கள் வந்து செல்​கின்​றனர்.

கோடை கால​மான ஏப்​ரல், மே மாதங்​களில் குளி​ரான காலநிலையை அனுப​விப்​ப​தற்​காக அதி​களவி​லான சுற்​றுலா பயணி​கள் வரு​வது வழக்​கம். அவ்​வாறு வரும் சுற்​றுலா பயணி​களை மகிழ்விக்​கும் வகை​யில், கோடை விழா நடத்​தப்​படு​கிறது.

இந்​தாண்டு கோடை விழாவையொட்டி தோட்​டக்​கலைத் துறை சார்​பில் காய்​கறி கண்​காட்​சி, ரோஜா கண்​காட்​சி, பழக்​கண்​காட்​சி, வாசனை திர​வியக் கண்​காட்​சி, மலர் கண்​காட்சி உள்​ளிட்ட பல்​வேறு நிகழ்​வு​கள் நடத்​தப்​பட்​டன. இந்​தாண்டு கடந்த மாதம் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மலர் கண்​காட்சி நடை​பெற்​றது. 11 நாட்​கள் நடை​பெற்ற மலர் கண்​காட்​சியை 1.84 லட்​சம் சுற்​றுலா பயணி​கள் கண்டு ரசித்​துள்​ளனர்.

கடந்த ஆண்டு ஏப்​ரல்​,மே மாதங்​களில் மொத்​தம் 7 லட்​சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்​திருந்த நிலை​யில், தற்​போது 6 லட்​சத்து 6 ஆயிரம் சுற்​றுலா பயணி​கள் மட்​டுமே வருகை தந்​துள்​ளனர். கடந்​தாண்​டுடன் ஒப்​பிடு​கை​யில் இந்த முறை கடந்த 2 மாதங்​களில் மட்​டும் ஒரு லட்​சம் சுற்​றுலா பயணி​களின் வருகை குறைந்​துள்​ளது.

இதுகுறித்து சுற்​றுலா ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: கோடை காலத்​தில் நீல​கிரி மாவட்​டத்​தில் போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​கும் வகை​யில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தர​வுப்​படி, கடந்​தாண்டு இ-பாஸ் நடை​முறையை தமிழக அரசு அறி​வித்​தது.

இதன் காரண​மாக​வும், கனமழை காரண​மாக​வும் பெரும்​பாலான சுற்​றுலா பயணி​கள் ஊட்​டிக்கு வரு​வதை தவிர்த்​தனர். இ-பாஸ் நடை​முறை மேலும் தொடர்ந்​தால், சுற்​றுலாப் பயணி​கள் எண்​ணிக்​கை​ குறை​யும். இதன் காரண​மாக நீல​கிரி மாவட்​டத்​தில் சுற்​றுலா பயணி​களை மட்​டும் நம்பி தொழில் செய்து வரு​வோர் பலரும்​ பா​திக்​கப்​படுவர்​ என்​றனர்​.





Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *