கொல்லிமலையில் ‘வல்வில் ஓரி’ விழா கோலாகல தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த மலர்க் கண்காட்சி | Valvil Ori festival begins in Kolli Hills

Spread the love


நாமக்கல்: ​கொல்​லிமலை​யில் வல்​வில் ஓரி விழா நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. இதையொட்டி அமைக்​கப்​பட்​டிருந்த மலர்க் கண்​காட்​சி​யைச் சுற்​றுலாப் பயணி​கள் கண்டு ரசித்​தனர்.

கடையேழு வள்​ளல்​களில் ஒரு ​வ​ரான வல்​வில் ஓரி மன்​னனை சிறப்​பிக்​கும் வகை​யில் கொல்​லிமலை​யில் ஆண்​டு​தோறும் ஆடிப்​பெருக்​கின்​போது வல்​வில் ஓரி விழா கொண்​டாடப்​படு​கிறது. நடப்​பாண்டு விழா நேற்று காலை தொடங்​கியது. எம்​எல்ஏ கு.பொன்​னு​சாமி, கோட்​டாட்​சி​யர் வே.​சாந்தி தலைமை வகித்​து, வல்​வில் ஓரி படத்​துக்கு மலர்​கள் தூவி மரி​யாதை செலுத்​தினர்.

இதையொட்​டி, அங்​குள்ள பூங்​கா​வில் மலர்க் கண்​காட்சி நடை​பெற்​றது. குழந்​தைகளைக் கவரும் வகை​யில் வண்ண ரோஜா மலர்​களால் கண்​ணாடி மாளிகை அமைக்​கப்​பட்​டிருந்​தது. மேலும், ரோஜா மலர்​களால் குதிரை, மான், காதல் சின்​னம், காய்​கறிகளால் கரடி, பறவை உரு​வங்​கள், தானி​யங்​களால் கால்​நடை உரு​வங்​கள், பழங்​களால் முதல்​வர் உரு​வம் ஆகியவை அமைக்​கப்​பட்​டுஇருந்தன.

மலர்க் கண்​காட்​சி​யில் ரோஜா, ஜெர்ப​ரா, கார்​னேஷன், ஆந்​தூரி​யம், ஜிப்​சோபில்​லம், சாமந்​தி, ஆர்​கிட், லில்​லி​யம், ஹெலிகோனி​யம், சொர்க்​கப்​பறவை, கிளாடியோஸ், டெய்​ஸி, சம்​பங்​கிப்பூ உள்​ளிட்ட 20 வகை​யான மலர்​கள் இடம் பெற்​றிருந்​தன. மூலிகைப் பயிர்​கள், அவற்​றின் மருத்​து​வக் குறிப்​பு​களு​டன் இடம்​பெற்​றிருந்​தன. இவை சுற்​றுலாப் பயணி​களை வெகு​வாக கவர்ந்​தன.

மேலும், செம்​மேட்​டில் உள்ள கலை​யரங்​கில் இசை நிகழ்ச்​சி, பள்ளி மாணவ, மாணவி​களின் கிராமிய நடனம் உள்​ளிட்ட பல்​வேறு கலை நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. இன்று (ஆக. 3) நலத்​திட்ட உதவி​கள் வழங்​குதல் மற்​றும் போட்​டிகளில் வெற்றி பெற்​றவர்​களுக்​குப் பரிசளிப்​பு விழா நடக்​கிறது.





Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *