கிரானைட் முறைகேடு விவகாரம் : ஆஜராக அவகாசம் கோரிய சகாயம்… விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

Spread the love


Last Updated:

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், கிரானைட் முறைகேடு வழக்கில் ஆஜராக கால அவகாசம் கோரியுள்ளார். பாதுகாப்பு பிரச்சினையால் நேரில் ஆஜராக முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சகாயம்சகாயம்
சகாயம்

கிரானைட் முறைகேடு வழக்கில் ஆஜராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கால அவகாசம் கோரியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர், விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குவாரிகளில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுக்கப்பட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக 2011ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை செய்த மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம், தனது அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கனிம வள வழக்கு மதுரை மாவட்ட கனிம வள நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் இதில் ஆஜராகாத சகாயம், கால அவகாசம் கோரி இந்நீதிமன்றத்துக்குக் கடிதமும் எழுதினார்.

அதில், தனக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டதால், தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என உயர்நீதிமன்றத்திற்கு தான் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதனால் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    மெக்சிகோவில் வன்முறையில் முடிந்த அரசுக்கு எதிரான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்

    Spread the love

    Spread the love      மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சனிக்கிழமையன்று அதிபரைக் கண்டித்து, அரசை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில்…


    Spread the love

    புயலுக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்த மீனவ பெண்கள்…! | ராமநாதபுரம்

    Spread the love

    Spread the love      Last Updated:December 03, 2025 1:00 PM IST டிட்வா புயலுக்கு பின் வானிலை சீராகி சற்று வெயில் அடிக்க தொடங்கியதால் பாம்பனில் கருவாடு உற்பத்தி தொடங்கி கருவாடு காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் ஈடுபட்டு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *