ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள் | Roses blooming in Ooty Park

Spread the love


ஊட்டி: கண்ணைக் கவரும் வகையில், ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்துச் செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவின் 100-வது ஆண்டு நினைவாக 1995-ம் ஆண்டு 10 ஏக்கர் பரப்பில் ஊட்டி ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இப்பூங்காவைத் திறந்துவைத்தார்.

முதலில் பல்வேறு வகையான 1,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டன. பின்னர் செடிகளின் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்ந்தது. கடந்த 2006-ம் ஆண்டு ஜப்பான் ஒசாகா நகரில் நடந்த சர்வதேச ரோஜா மாநாட்டில் ‘கார்டன் ஆப் தி எக்ஸலன்ஸ்’ விருதுக்கு இப்பூங்கா தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், பூங்கா மேலும் 2 ஏக்கர் விரிவுபடுத்தப்பட்டு 200 புதிய ரக ரோஜாக்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது இந்தப் பூங்காவில் 4,000 ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. கோடை சீசனை முன்னிட்டு, பூங்காவில் உள்ள செடிகள் கவாத்து செய்யப்பட்டு, உரமிடப்பட்டன. தற்போது, பூங்காவில் பல வண்ண ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கோடை மழை பெய்யாத நிலையில், செடிகளுக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்துச் செல்கின்றனர்.





Source link


Spread the love
  • Related Posts

    ‘அமெரிக்காவுக்கு வந்து பயிற்சி அளித்துவிட்டு சொந்த நாட்டுக்கு சென்றுவிடுங்கள்’

    Spread the love

    Spread the love      எனவே, அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அத்தகைய திறன்களைக் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு இங்கு கொண்டு வருவதே அதிபரின் தொலைநோக்குப் பார்வை என்று நான் நினைக்கிறேன். இங்குள்ளவர்களுக்கு பயிற்சியளித்த பின்னர்…


    Spread the love

    அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:December 10, 2025 10:20 PM IST 11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. News18 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை (11ஆம் தேதி)…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *