உதகை தாவரவியல் பூங்காவில் கண்ணை கவரும் டாப்ஃபோடில் மலர்கள் | daffodil flowers at the Ooty Botanical Gardens

Spread the love


உதகை தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில், புதிய வரவான டாப்ஃபோடில் மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவுக்கு கோடை சீசன் நாட்களில் பல லட்சம் பேர் வரும் நிலையில், வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு மே மாதம் கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதற்காக, பல வண்ணங்களில், பல்வேறு வகையில் 5 லட்சம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில், புதிய வரவான டாப்ஃபோடில் என்ற மலர்கள், தொட்டிகளில் அலங்கரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

பெரும்பாலான சுற்றுலா பயணிகள், அலங்கார தொட்டிகளின் நடுவே நின்று ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்கின்றனர்.





Source link


Spread the love
  • Related Posts

    அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:December 10, 2025 10:20 PM IST 11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. News18 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை (11ஆம் தேதி)…


    Spread the love

    Anant Ambani : மனிதாபிமான பணிகளுக்காக சர்வதேச விருது வென்ற ஆனந்த் அம்பானி.. ஆசியாவின் முதல் நபராக கவுரவம்… | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Last Updated:December 08, 2025 9:28 PM IST விலங்குகள் நமக்கு சமநிலையை கற்பிக்கின்றன. அவற்றிலிருந்து பணிவையும் நம்பிக்கையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். விருதுகளுடன் ஆனந்த் அம்பானி மனிதாபிமான பணிகளுக்கான சர்வதேச விருதினை வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *