ஆவடியில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த பல்சர் பைக் | தமிழ்நாடு

Spread the love


Last Updated:

Pulsar Bike Fire | பெட்ரோல் வாகனம் என எந்த வாகனத்தையும் கோடைகாலத்தில் பராமரிப்பு முறையாக செய்யவில்லை என்றால் இதுபோன்ற தீ விபத்து நடைபெறும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.





 தீ பிடித்து எரிந்த பல்சர் பைக்
தீ பிடித்து எரிந்த பல்சர் பைக்

ஆவடி பேருந்து நிலையம் அருகே  தீ பிடித்து எரிந்த பல்சர் இருசக்கர வாகனத்தை பொதுமக்களே  தண்ணீர் லாரியை மடக்கி தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

ஆவடியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தன்னுடைய பல்சர் இருசக்கர வாகனத்தை பூந்தமல்லி அருகே வாட்டர் வாஷ் செய்து அங்கிருந்து  ஓட்டி வந்தபோது பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் லீக் ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென  தீ பிடித்தது. இதில் பல்சர் இருசக்கர வாகனம்  முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் சாலையில் சென்ற தண்ணீர் டேங்கர் லாரியை வழிமறித்து கொழுந்துவிட்டு எரிந்த இருசக்கர வாகனத்தை பெருமுயற்சி செய்து தீயை அணைத்தனர். எனினும் பேருந்து நிலையம் அருகே பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் : கன்னியப்பன்



Source link


Spread the love
  • Related Posts

    மும்மொழி கொள்கை தமிழ் மொழிக்கு பாதிப்பு இல்லை: அமைச்சர் பிரதான் | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:Jan 14, 2026 9:56 PM IST “மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதால் தமிழ் மொழிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய கல்விக் கொள்கை என்பது தாய்மொழிகளை மாற்றுவதோ, பலவீனப்படுத்துவதோ இல்லை” என தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.…


    Spread the love

    Tamil Live Breaking News: ”நல்விடியல் பிறக்கட்டும்..” தவெக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Tamil Live Breaking News: தீபாவளியை முன்னிட்டு சென்னை-திருச்சிக்கு இன்று சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – திருச்சிக்கு இன்று இரவு 9.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 8…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *