ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் காலமானார்: டிம் குக் இரங்கல் | apple computer designer bill atkinson dead

Spread the love


சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வடிவமைப்பாளரான பில் அட்கின்சன் காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவை அவரின் குடும்ப உறுப்பினர் உறுதி செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார்.

“பில் அட்கின்சனின் மறைவால் நாங்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம். அவர் ஓர் உண்மையான தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது படைப்பாற்றல் என்றென்றும் போற்றப்படும். அவர் மேற்கொண்ட பணிகள் நம்மை ஊக்குவிக்கும்” என எக்ஸ் தளத்தில் டிம் குக் ட்வீட் செய்துள்ளார்.

யார் இந்த பில் அட்கின்சன்? – வாஷிங்டன்னில் பிறந்தவர் பில் அட்கின்சன். கணினி அறிவியல் மற்றும் நியூரோ பயாலஜியில் பட்டம் பெற்றுள்ளார். ஆப்பிள் நிறுவன கணினியின் வடிவமைப்பாளராக ‘குயிக் டிரா’ என்ற மென்பொருளை வடிவமைத்தவர். லிசா மற்றும் மேகிண்டோஷ் கணினிகளில் இது அடிப்படை மென்பொருளாக பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயனர்களுக்கு கிராஃபிகல் (Graphical) பயனர் அனுபவத்தை வழங்கியது. இதோடு ‘புல் டவுன்’ மெனுக்கள், ஃபைல்களை ஓபன் செய்ய ‘டபுள் கிளிக்’ அம்சம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ததும் இவர் தான். ‘மேக் பெயிண்ட்’ என்ற மென்பொருளையும் வடிவமைத்தவர்.





Source link


Spread the love
  • Related Posts

    அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை.. தலைமைச் செயலாளர் எச்சரிக்கை | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:December 10, 2025 10:20 PM IST 11ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. News18 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நாளை (11ஆம் தேதி)…


    Spread the love

    Anant Ambani : மனிதாபிமான பணிகளுக்காக சர்வதேச விருது வென்ற ஆனந்த் அம்பானி.. ஆசியாவின் முதல் நபராக கவுரவம்… | Breaking and Live Updates

    Spread the love

    Spread the love      Last Updated:December 08, 2025 9:28 PM IST விலங்குகள் நமக்கு சமநிலையை கற்பிக்கின்றன. அவற்றிலிருந்து பணிவையும் நம்பிக்கையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். விருதுகளுடன் ஆனந்த் அம்பானி மனிதாபிமான பணிகளுக்கான சர்வதேச விருதினை வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *