“அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லை” – நீதிமன்றத்தில் ராம்குமார் தகவல்!

Spread the love


Last Updated:

சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டின் மீது உரிமை இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News18News18
News18

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அன்னை இல்லத்தின் மீது ராம்குமாருக்கு எந்த உரிமையும் அல்லது பங்கும் இல்லை எனக்கூறினார்.

இதனையடுத்து, அன்னை இல்லத்தின் மீது தனக்கு தற்போது, எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை எனவும் எதிர்காலத்திலும் அவ்வாறு எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவிட்ட நீதிபதிவழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.

[]

Source link


Spread the love
  • Related Posts

    களிமேடு தேர் விபத்து: சட்டப்பேரவையில் இரங்கல்.. மவுன அஞ்சலி | தமிழ்நாடு

    Spread the love

    Spread the love      Last Updated:April 27, 2022 12:12 PM IST தஞ்சாவூர் தேர் விபத்தில் பலியானவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது பேசிய எம்.எல்.ஏ. அன்பழகன் பத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று…


    Spread the love

    Play Exciting Slot Games for Free Online in Thailand

    Spread the love

    Spread the love     Invite to the exhilarating world of on the internet slot video games, สล็อตออนไลน์ where the excitement of gambling enterprise gaming meets the comfort of playing from anywhere. In…


    Spread the love

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *